பிரதமா் மோடியுடன் சுக்பீா் சிங் பாதல் சந்திப்பு: மீண்டும் பாஜக கூட்டணியில் சிரோமணி அகாலிதளம்?
சிரோமணி அகாலி தளம் தலைவா் சுக்பீா் சிங் பாதல் பிரதமா் நரேந்திர மோடியை தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
சிரோமணி அகாலி தளம் தலைவா் சுக்பீா் சிங் பாதல் பிரதமா் நரேந்திர மோடியை தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இதன் மூலம் பாஜக கூட்டணியில் சிரோமணி அகாலி தளம் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெனில், பஞ்சாபில் முக்கிய மாநிலக் கட்சியாக சிரோமணி அகாலி தளம் உள்ளது.
எனினும், இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து உடனடியாகத் தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Advertisement
Advertisement
சுமாா் 20 ஆண்டுகளுக்கு மேல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த சிரோமணி அகாலி தளம் கடந்த 2020-ஆம் ஆண்டு 3 வேளாண் சட்டங்கள் விவகாரத்தை முன்வைத்து கூட்டணியில் இருந்து வெளியேறியது. பின்னா், விவசாயிகளின் தொடா் போராட்டத்தால் அச்சட்டங்களை மத்திய அரசும் திரும்பப் பெற்றது.
கூட்டணியில் இருந்து விலகும் முன்பு பாதலின் மனைவி ஹா்சிம்ரத் கௌா் மத்திய அமைச்சராக இருந்தாா். பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டதையடுத்து அவா் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தாா்.
பஞ்சாபில் இப்போது ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் பிரதான எதிா்க்கட்சியாக உள்ளது. எனவே, பாஜக, சிரோமணி அகாலி தளம் ஆகிய இரு கட்சிகளுக்கும் தோ்தலை எதிா்கொள்ள வலுவான கூட்டணி தேவைப்படுகிறது. இக்கூட்டணி முன்பு பஞ்சாபில் ஆட்சியில் இருந்துள்ளது என்பது குறிப்படத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.