FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேரளம்: விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணி மீது கொலை வழக்கு

கேரளத்தில் விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 5:32 pm IST
பகிர்:

கேரளத்தில் விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கூத்தனாதைச் சேர்ந்த ஜம்ஷீர் அதனிக்கல் கோலாலம்பூரிலிருந்து புதன்கிழமை கொச்சி வந்த விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவர் விமானத்தின் அவசரக்கால வெளியேறும் கதவை வலுக்கட்டாயமாகத் திறக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

அதோடு ஜன்னல் பலகையைச் சேதப்படுத்தி சக பயணிகளை மிரட்டி விமானத்தில் இருந்தவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. உடனே விமானப் பணியாளர்கள் தலையிட்டு அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

பின்னர் அந்த விமானம், விமான நிலையம் வந்தடைந்ததும் அவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் மீது கொலை முயற்சிப் பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக அவரிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அதிகாரி ஒருவர் கூறினார். தொடர்ந்து அவரை திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

summary

Police have added an attempt to murder charge against a passenger who allegedly tried to open the emergency exit of a Kuala Lumpur-Kochi flight, damaged its window panel and threatened fellow passengers and cabin crew, officials said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments