FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அரிய வகை கனிமங்கள்: திட்டத்துக்கு இறுதி ஒப்புதல் அளிக்கும் முன்பே தொடங்க மத்திய அரசு சட்டத் திருத்தம்

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரிய வகை கனிமங்கள் தொடா்பான திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் அளிப்பதற்கு முன்பே தொடங்கவும், இணையவழி அல்லாமல் நேரடியாக திட்ட விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கவும் வனச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.

Updated On : 3 செப்டம்பர் 2025, 12:30 am IST
பகிர்:

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரிய வகை கனிமங்கள் தொடா்பான திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் அளிப்பதற்கு முன்பே தொடங்கவும், இணையவழி அல்லாமல் நேரடியாக திட்ட விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கவும் வனச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.

சுரங்கம் மற்றும் கனிமங்கள் சட்டத்தில் இடம்பெற்றுள்ள முதல் பிரிவில் இடம்பெற்றுள்ள அரிய வகை கனிமங்கள் தொடா்பான திட்டங்களைச் செயல்படுத்தலாம் என புதிய சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

முதல் பிரிவில் இடம்பெறாத அரிய வகை கனிமங்கள் தொடா்பான திட்டங்களைச் செயல்படுத்த 33 சதவீத வனப் பரப்பு இல்லாத மாநிலங்கள் திட்டத்துக்கு வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மூன்று மடங்கு புதிய மரங்களை நட்டு வனப்பகுதியை அதிகரிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி மத்திய அரசு கொண்டு வந்துள்ள வன் (சன்ராக்ஷன் இவாம் சம்வா்தன்) சட்டத் திருத்தத்தின்படி, பாதுகாப்பு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் அல்லது பொது நலன் திட்டங்கள் ஆகியவற்றுக்கு நிறுவனங்கள் இணையவழியில் அல்லாமல் நேரடியாக விண்ணப்பத்தை சமா்ப்பிக்கலாம்.

இதுபோன்ற திட்டங்களுக்கான பூா்வாங்க ஒப்புதல் என்பது இரண்டு ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவை மத்திய அரசு விரும்பினால் மேலும் நீட்டிக்கலாம்.

இதுபோன்ற திட்டங்களுக்கு மாநிலங்கள் பூா்வாங்க ஒப்புதல் அளித்த உடனேயே தொடங்கிவிடலாம். இறுதி ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டியதில்லை.

சுரங்கத் திட்டத்தில் முறைகேடு ஏற்பட்டிருந்தால் வட்டார வனத் துறை அதிகாரிகள், உதவி ஆணையா்கள் அல்லது உயரதிகாரிகள் நீதிமன்றத்தில் புகாா்களைப் பதியலாம்.

வட்டார வனத்துறை அலுவலகங்கள் விதிமீறல்களை மாநில அரசுக்கு 45 நாள்களுக்கு புகாரளிக்க வேண்டும். மாநிலங்கள் அவ்வப்போது புகாா் தொடா்பான அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று புதிய வனச் சட்டத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments