கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!
கிராமபுற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி...
கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் மேம்படுத்தும் வகையில் தேசிய அளவிலான பிரசாரத்தை கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே இன்று (ஆக. 11) தொடங்கியுள்ளார்.
அடிப்படை வசதிகள் குறித்து தணிக்கை நடத்துமாறு பெற்றோர்களுக்கும் கல்வி நிறுவனங்களை மேம்படுத்த உதவுமாறு கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
புறக்கணிக்கப்படும் கிராமப்புற கல்வி மேம்பாடு என்ற தலைப்பில் மேற்கொள்ளப்படும் இந்த பிரசாரம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. நாட்டு மக்கள், பெற்றோர்கள், கிராமப்புற பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரும் இதற்காக ஒன்றிணைய வேண்டும் என அபிஜீத் தீப்கே கேட்டுக்கொண்டார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக வெளியிட்டுள்ள விடியோவில் அவர் தெரிவித்துள்ளதாவது:
''வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நமது 80 வது சுதந்திர தினம். ஆனால், கடந்த 80 ஆண்டுகளில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட அல்லது கவனிக்கப்படாத விஷயம் ஒன்று உண்டென்றால், அது நமது கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகள்தான்.
நாம் புதிய நாடாளுமன்றத்தையும், பிரதமருக்கான புதிய இல்லத்தையும் அமைத்துள்ளோம். ஆனால், நம் கிராமங்களில் ஏன் புதிய பள்ளிக்கூடங்களை நம்மால் கட்ட முடியவில்லை? விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளை நம் நாட்டின் எதிர்காலமாக நாம் கருதவில்லையா?
இன்றும் கூட, கிராமப்புற சிறுவர்கள் பள்ளிக்குச் செல்ல நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. அங்கு சென்ற பிறகு, அவர்களுக்குத் தண்ணீர் அல்லது கழிப்பறை வசதிகள் கிடைப்பதில்லை.
இந்த ஆகஸ்ட் 15-ஆம் நாளில், நாம் எதிலாவது கவனம் செலுத்த வேண்டும் அல்லது ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்றால், நமது அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதிலிருந்தே அதைத் தொடங்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
நாங்கள் உங்களுக்கு உரிய அங்கீகாரத்தை அளிப்போம்; இதன் மூலம், உங்களையும் நீங்கள் மேம்படுத்திய பள்ளிகளையும் பார்த்து, மற்ற கிராமத் தலைவர்களும் தங்கள் கிராமங்களில் உள்ள பள்ளிகளை மேம்படுத்தத் தொடங்குவார்கள்.
நீங்கள் உங்கள் பிள்ளைகளின் பள்ளிக்குச் செல்லுங்கள். அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யுங்கள். மின்சாரம், குடிநீர், கழிப்பறை என அடிப்படை வசதிகள் உள்ளனவா? மதிய உணவுத் திட்டம் முறையாக இருக்கிறதா? பெற்றோர்கள் விடியோ எடுத்துப் பதிவிடுங்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக விடியோ எடுங்கள்.
கிராமங்களில் உள்ள பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவோம் என கிராமப்புற மாணவர்களுக்கு உறுதி அளிப்போம். ஒற்றுமையாக இதனை நாம்மால் செய்ய முடியும். உண்மையான இந்தியா கிராமங்களிலேயே உள்ளது'' என அபிஜீத் தீப்கே குறிப்பிட்டார்.
CJP announces nationwide campaign to improve condition of rural schools
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.