FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

டிஜிட்டல் கைது: சிபிஐ பெயரில் முன்னாள் நீதிபதியிடம் ரூ. 2.50 கோடி மோசடி!

ஜெய்ப்பூரில் முன்னாள் நீதிபதியிடம் மோசடி செய்தது பற்றி..

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 2:19 pm IST
சைபர் மோசடி - file photo
பகிர்:

ஜெய்ப்பூரில் சிபிஐ அதிகாரிகள் மற்றும் ரிசர்வ் வங்கி மேலாளர் போல நடித்து முன்னாள் மாவட்ட நீதிபதியிடம் சுமார் ரூ. 2.50 லட்சம் மோசடி செய்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கன்பத் பண்டாரி (90) வயதான முன்னாள் மாவட்ட நீதிபதியை சுமார் 15 நாள்கள் டிஜிட்டல் கைதின் அடிப்படையில் சைபர் மோசடிக்காரர்கள் அவரிடமிருந்து ரூ. 2.50 கோடியை மோசடி செய்துள்ளனர்.

கடந்த ஜூலை 28 அன்று அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து பண்டாரிக்கு வாட்ஸ்ஆப் விடியோ அழைப்பு வந்துள்ளது. காவல்துறை சீருடை அணிந்திருந்த அந்த நபர், தன்னை மும்பையைச் சேர்ந்த சிபிஐ அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். ரூ. 50 கோடி மதிப்பிலான ஹவாலா பணப் பரிவர்த்தனை கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதில் ரூ. 40 லட்சம் பண்டாரியின் எஸ்பிஐ கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரிடம் கூறினார்.

Advertisement

Advertisement

கைது செய்வதாக மிரட்டிய அந்த மோசடிக்காரர், இதுகுறித்து குடும்பத்தினரிடம் தெரிவிக்கக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். பின்னர், மற்றொரு நபர் வாட்ஸ்ஆப் மூலம் பண்டாரியைத் தொடர்புகொண்டு, தன்னை ரிசர்வ் வங்கி மேலாளர் என்று கூறிக்கொண்டார்.

ஹவாலா பரிவர்த்தனையுடன் தொடர்புடைய பணம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அந்த நபர், பண்டாரியின் நிதி முதலீடுகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.

பயம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக, பண்டாரி தனது மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பிற நிதி ஆவணங்கள் தொடர்பான விவரங்களை அந்த நபர்களிடம் பகிர்ந்துகொண்டார். அதன்பிறகு, விசாரணைக்கு உதவுவதாகக் கூறி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்புமாறு மோசடிக்காரர்கள் அவரை அறிவுறுத்தினர்.

ஆகஸ்ட் 3 முதல் 10ஆம் தேதி வரை காந்தி நகரில் உள்ள தனது எஸ்பிஐ கணக்கிலிருந்து பண்டாரி மொத்தம் ரூ. 2,50,51,000 (ரூ. 2.5 கோடி பணத்தை மாற்றினார். ஒவ்வொரு உரையாடலுக்குப் பிறகும் வாட்ஸ்ஆப் உரையாடல்கள், அழைப்புப் பதிவுகளை அழிக்குமாறு மோசடிகாரர்கள் பண்டாரியிடம் அறிவுறுத்தினர்.

பின்னர், தனது பிபிஎஃப் கணக்கிலிருந்தும் பணத்தை அனுப்புமாறு மோசடிக்காரர்கள் பண்டாரியிடம் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அவர் எஸ்பிஐ வங்கியின் ஜோஹரி பஜார் கிளைக்குச் சென்றபோது, ​​வங்கி மேலாளருக்குச் சந்தேகம் ஏற்பட்டு அந்தப் பணப் பரிவர்த்தனையைத் தடுத்து நிறுத்தினார். பண்டாரியிடம் விசாரணை நடத்திய மேலாளர், அவர் இணையவழி மோசடியில் சிக்கியிருப்பதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து பண்டாரி தனது மருமகனைத் தொடர்புகொண்டு, நடந்த விஷயத்தைத் தெரிவிக்கையில், அவர் ஜோதி நகர் காவல் நிலையத்தில் ஜூலை 28 அன்று புகார் அளித்தார். பாரதிய நியாய சன்ஹிதா, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

A 90-year-old former district judge was allegedly duped of Rs 2.50 crore by cyber fraudsters who posed as CBI officials and an RBI manager, and kept him under "digital arrest" for around 15 days, police said on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments