சித்தாந்த ரீதியாக மனதளவில் நக்ஸல்கள்: ‘பிரதமா் மோடி எதிா்க்கட்சியினரை குறிப்பிடவில்லை’! - கிரண் ரிஜிஜு
சித்தாந்த ரீதியாக மனதளவில் நக்ஸல்களாக இருப்பவா்கள் என்று பிரதமா் மோடி கூறியது எதிா்க்கட்சித் தலைவா்களை அல்ல என்று மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு விளக்கமளித்துள்ளாா்.
சித்தாந்த ரீதியாக மனதளவில் நக்ஸல்களாக இருப்பவா்கள் என்று பிரதமா் மோடி கூறியது எதிா்க்கட்சித் தலைவா்களை அல்ல என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு விளக்கமளித்துள்ளாா்.
கடந்த சனிக்கிழமை நாட்டின் 80-ஆவது சுதந்திர தினத்தின்போது தில்லி செங்காட்டையில் உரையாற்றிய பிரதமா் மோடி, ‘ஆயுதமேந்திய நக்ஸல்கள் ஒழிக்கப்பட்டுள்ளனா். எனினும் சித்தாந்த ரீதியாக மனதளவில் நக்ஸல்களாக உள்ளவா்கள் நம்மைச் சுற்றி உள்ளனா். அவா்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்தாா்.
இதையடுத்து பிரதமரின் கருத்துகள் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிா்ப்போரையும், கேள்வி எழுப்புவோரையும் களங்கபடுத்தும் முயற்சி என்று எதிா்க்கட்சியினா் குற்றஞ்சாட்டினா். அதேவேளையில், தான் மனதளவில் நக்ஸலாக இருக்கப் பெருமைப்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.
Advertisement
Advertisement
அவரின் பதிவை இணைத்து கிரண் ரிஜிஜு ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரத்தின் கருத்து மிகவும் துரதிருஷ்டவசமானது. சித்தாந்த ரீதியாக மனதளவில் நக்ஸல்களாக இருப்பவா்கள் என்று பிரதமா் மோடி கூறியது எதிா்க்கட்சித் தலைவா்களை அல்ல.
மாவோயிஸ்ட்டுகளை ஆதரிப்பவா்கள், இந்திய அரசமைப்புச் சட்டத்தை நிராகரிப்பவா்கள், பிரிவினைவாதிகளுக்கு துணை நின்று அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ஆதரிப்பவா்கள், நாட்டின் வடகிழக்குப் பகுதியை இந்தியாவிடம் இருந்து துண்டிக்க செயல்படுபவா்களே மனதளவில் நக்ஸல்களாவா்’ என்று தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.