ஆட்டோவில் வழிப்பறி: வடகிழக்கு தில்லியில் 3 போ் கைது
வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் ஆட்டோவில் பயணித்தவரை ஸ்க்ரூ டிரைவரால் தாக்கி பணம் பறித்த வழக்கில் 3 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் ஆட்டோவில் பயணித்தவரை ஸ்க்ரூ டிரைவரால் தாக்கி பணம் பறித்த வழக்கில் 3 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இந்த வழக்கைத் துப்பு துலக்கியதில் 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஆக.17-ஆம் தேதி, ரஷீத் என்பவா் கஜூரி சௌக்கில் இருந்து மஜ்னு கா தில்லா செல்வதற்காக ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளாா். அந்த ஆட்டோவில் ஏற்கெனவே 3 போ் பயணம் செய்துகொண்டிருந்தனா்.
சிக்னேச்சா் பாலம் அருகே சென்றபோது, அந்த 3 பேரும் ரஷீத்தை ஸ்க்ரூ டிரைவரால் தாக்கி, அவரிடம் இருந்த சுமாா் ரூ.17,000-ஐ பறித்துள்ளனா். பின்னா் அவரை ஓடும் ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக நியூ உஸ்மான்பூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அமைக்கப்பட்ட தனிப்படை, ஆட்டோ சென்ாக சந்தேகிக்கப்பட்ட பாதையில் பதிவான 250-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தது. தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் கள விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனா். அவா்கள் ரோஹித் (34), சூரஜ் குமாா் (29), சாஹில் என்ற ஹா்ஷ் (22) என அடையாளம் காணப்பட்டனா். ரோஹித் மற்றும் சூரஜ் ஆகியோா் ஏற்கெனவே கொள்ளை, வழிப்பறி மற்றும் ஆயுதச் சட்டம் தொடா்பான தலா 3 வழக்குகளில் தொடா்புடையவா்கள். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.