FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இதய பரிசோதனை செய்யாமல் இம்ரான் கான் மீண்டும் சிறையில் அடைப்பு!

இம்ரான் கானுக்கு இதய பரிசோதனை மறுக்கப்பட்டது தொடர்பாக..

10 வினாடிகள் முன்பு
இம்ரான் கான் - file photo
பகிர்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இதய சிகிச்சையான சிடி கரோனரி ஆஞ்சியோகிராபி பரிசோதனை செய்ய மத்திய தகவல் பிரிவு செயலாளர் ஷேக் வகாஸ் அக்ரம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் செயல்படும் நிலையில் சிடி ஸ்கேனர் இருந்தபோதிலும், இம்ரான் கானுக்கு மருத்துவ ரீதியாகப் பரிந்துரைக்கப்பட்ட பரிசோதனையை வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

Advertisement

Advertisement

கண் சிகிச்சை மற்றும் பிற மருத்துவப் பரிசோதனைகளுக்காக இம்ரான் கான் வெள்ளிக்கிழமையன்று பிஐஎம்எஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதயத்திற்கான சிடிஏ பரிசோதனையை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால், அதற்கான வசதி அந்த மருத்துவமனையில் இல்லை என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, அப்பரிசோதனை செய்யப்படாமலேயே அவர் மீண்டும் அடியலா சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதிகாரிகளின் இந்தப் போக்கை வண்மையாக கண்டிக்கிறோம். ஷிஃபா இன்டர்நேஷனல் மருத்துவமனையில் அப்பரிசோதனையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதை தனிப்பட்ட நிர்வாகத் தவறு என்று புறக்கணிக்க முடியாது. இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று அவர் கூறினார்.

ஷிஃபா இன்டர்நேஷனல் மருத்துவமனையில் இம்ரான் கானுக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டிய அவர், அதிகாரிகள் அந்த உத்தரவைப் புறக்கணித்துவிட்டு, சிடிஏ பரிசோதனை செய்ய முடியாத ஒரு மருத்துவமனைக்கு அவரை மாற்றியதாகக் குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments