FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மோடி, ஆர்.எஸ்.எஸ். பெயர்களை நீக்கக் கோரியதால் சோனியா சுயசரிதை வெளியீடு இல்லை!

சோனியா காந்தி சுயசரிதையில் மோடி, ஆர்எஸ்எஸ் பெயர்களை நீக்கக் கோரியதால் புத்தக வெளியீடு இல்லை...

20 வினாடிகள் முன்பு
சோனியா - மோடி.
பகிர்:

சோனியா காந்தி சுயசரிதையில் மோடி, ஆர்எஸ்எஸ் பெயர்களை நீக்கக் கோரியதால் புத்தக வெளியீடு இல்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டிலிருந்து விலகியுள்ளதாக பென்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

‘பிலாங்கிங்: ஏ ஜா்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) என்ற 544 பக்க சுயசரிதை புத்தகத்தை சோனியா காந்தி எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்தின் பிரிவான ஆல்பிரட் ஏ நோப் பதிப்பகம் வெளியிடவிருந்தது.

Advertisement

Advertisement

இந்த புத்தகத்தில் இத்தாலியில் சோனியா காந்தியின் ஆரம்பகால வாழ்க்கை குறித்தும், அதன்பிறகு 19-ஆவது வயதில் பிரிட்டனில் வைத்து ராஜீவ் காந்தியை காதலித்தது, 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை திருமணம் செய்து கொண்டு இந்தியாவுக்கு வந்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மருமகளாக மாறியது குறித்தும் எழுதப்பட்டுள்ளது.

இந்திரா காந்தியிடம் சோனியா காந்தி முதன்முதலில் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டது முதல், ஹிந்தி கற்க எடுத்து கொண்ட முயற்சிகள், சேலை அணிவது குறித்தும், இந்திரா காந்தி படுகொலையை அடுத்து ராஜீவ் பிரதமரானது, பிறகு ராஜீவ் படுகொலையை தொடர்ந்து, சோனியா காந்தி விருப்பமின்றி பொது வாழ்க்கைக்குள் நுழைந்தது குறித்தும் நினைவுகூரப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை வருகிற நவ. 10-ஆம் தேதி வெளியிடவுள்ளதாக ஆல்பிரட் ஏ நோப் பதிப்பகம் ஏற்கெனவே அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், புத்தகத்தில் சில மாற்றங்களையும், சில பகுதிகளை நீக்கவும் பதிப்பகம் கேட்டுக் கொண்டதாகவும், அதனை சோனியா காந்தி மறுத்த நிலையில், இந்தப் புத்தகத்தை வெளியிடப்போவதில்லை என்று பென்குயின் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அந்த மாறுதல்களில், பிரதமர் நரேந்திர மோடி, ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தொடக்க புள்ளியான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்), மற்றும் சீன ஊடுருவல்கள் குறித்த விவரங்களை மாற்றவோ அல்லது நீக்கவோ சோனியா காந்தி மறுத்ததால், பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா இந்தப் புத்தகத்தை வெளியிட மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பேசிய சோனியா காந்தி, “தன்னுடைய வரலாற்றுக் குறிப்புகளில் வேறெந்த மாறுதல்களையும் செய்ய முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சுயசரிசையில், 2004-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் தன்னை ‘ஜெர்சி மாடு’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சோனியா காந்தியின் புத்தகத்தை வெளியிட 'ஹார்பர் காலின்ஸ் இந்தியா' (HarperCollins India) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணி இறுதிகட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், திட்டமிட்டபடி நவ. 10 ஆம் தேதி சோனியா காந்தியின் ‘பிலாங்கிங்: ஏ ஜா்னி ஆஃப் லவ்’ புத்தகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தப் புத்தக வெளியீடு குறித்து ஹார்பர் காலின்ஸ் இந்தியா எந்தவொரு அதிகாரபூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை.

summary

After Penguin Random House India Friday said that it is “not the publisher” of Sonia Gandhi’s upcoming memoir, Belonging: A Journey of Love, in India, Congress has alleged that the Narendra Modi government is “pressuring publishers”.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments