நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க பிரதமருக்கு கார்கே கடிதம்!
நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்க மோடிக்கு கார்கே கடிதம் எழுதியது பற்றி..
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளைத் தீவிரப்படுத்தவும், அங்குச் சிக்கியுள்ளவர்களைப் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில் நேபாளத்தில் தேவைப்படும் இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையை பணியமர்த்துமாறு கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,
Advertisement
Advertisement
நேபாள அரசுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதுமான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் கார்கே வலியுறுத்தினார்.
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 2,000 பேருக்கு மேல் காணாமல் போயுள்ளனர். இந்த பேரிடரால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு, மருந்துகள், தங்குமிடம் மற்றும் பிற அத்தியாவசிய உதவிகள் அவசரமாகத் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேபாள அரசுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதுமான மனிதாபிமான மற்றும் நிவாரண உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
காணாமல் போனவர்களில் 320 இந்தியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்ற வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்திருந்தது. நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கவும், வெளியேற்றும் பணிகளைத் தீவிரப்படுத்தவும், அவர்கள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் இந்தியா திரும்புவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
உள்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில்,
தேவைப்படும் இடங்களில் என்டிஆர்எஃப் குழுக்களைப் பணியமர்த்தவும், பேரிடர் நிவாரண உதவிகளை வழங்கவும் அரசை வலியுறுத்துகிறேன்.
இந்த துயரமான நேரத்தில், இந்தியா நேபாள மக்களுடன் உறுதியாக நிற்க வேண்டும். மீட்பு, வெளியேற்றம் மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ நேபாள அரசுடன் இணைந்து தேவைப்படும் இடங்களில் என்டிஆர்எஃப் குழுக்களைப் பணியமர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த மனிதாபிமான நெருக்கடியை அரசு துரிதமாகவும், உணர்வுப்பூர்வமான அணுகுமுறையுடனும் கையாளும் என்று நம்புகிறேன் என்று அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
Congress president Mallikarjun Kharge has written to Prime Minister Narendra Modi urging him to intensify rescue and evacuation efforts for all Indians stranded in flood-hit Nepal and arrange for their safe return to India.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.