FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தது பற்றி.....

29 ஆகஸ்ட் 2026, 8:30 pm IST
உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி
பகிர்:

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார்.

விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷாவ்கத் மிா்ஸியோயேவ் நேரில் வரவேற்றார். தனது இரண்டு நாள் உஸ்பெகிஸ்தான் பயணத்தின் போது, அதிபர் மிா்ஸியோயேவ் உடன் வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் இணைப்பு, பாதுகாப்பு மற்றும் எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பு குறித்து பிரதமர் மோடி விவாதிக்க உள்ளார்.

மேலும் இந்த பயணத்தில் சாஸ்திரி நினைவிடம் மற்றும் தாஷ்கண்ட் மாநில அமைதி ஆய்வுகள் பல்கலைக்கழகத்தில் உள்ள மகாத்மா காந்தி மையம் ஆகியவற்றிக்கும் செல்லவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமா் மோடி உஸ்பெகிஸ்தான் செல்வது இது 4-ஆவது முறையாகும்.

Advertisement

Advertisement

பின்னா் அங்கிருந்து கிா்கிஸ்தானுக்கு பயணிக்கும் அவா், பிஸ்கேக் நகரில் ஆக.31, செப்.1 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார். அத்துடன் கிா்கிஸ்தானில் 6-ஆவது உலக நாடோடி இன பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவிலும் பிரதமா் பங்கேற்கவுள்ளாா்.

summary

Prime Minister Narendra Modi arrived in Uzbekistan on Saturday, where he will hold delegation-level talks with President Shavkat Mirziyoyev, aiming to further strengthen the strategic partnership between the two countries.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments