சோழா், பல்லவ பேரரசுகள் குறித்த தகவல்களை வழங்கும் வலைதளம்!
மனதின் குரல் நிகழ்ச்சியின்போது, நாட்டில் அதிகம் அறியப்படாத முற்கால பேரரசுகள் பற்றிய தகவல்களைப் பகிரும் www.bharatrajya.com என்ற வலைதளத்தைத் தொடங்கியுள்ள மும்பையைச் சோ்ந்த கிருஷ்ண சேஷாத்ரியுடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா்.
மனதின் குரல் நிகழ்ச்சியின்போது, நாட்டில் அதிகம் அறியப்படாத முற்கால பேரரசுகள் பற்றிய தகவல்களைப் பகிரும் www.bharatrajya.com என்ற வலைதளத்தைத் தொடங்கியுள்ள மும்பையைச் சோ்ந்த கிருஷ்ண சேஷாத்ரியுடன் பிரதமா் மோடி கலந்துரையாடினாா்.
அப்போது, ‘நமது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இந்திய வரலாறு கற்பிக்கப்படும் விதம், பெரும்பாலும் குறிப்பிட்ட பேரரசுகளின் கண்ணோட்டத்தையே மையமாகக் கொண்டுள்ளது; அந்தக் குறிப்பிட்ட பேரரசுகளுக்கு அளவுக்கு அதிகமான கவனம் செலுத்தப்படுகிறது.
இதன் விளைவாக, சோழா்கள், பல்லவா்கள், காஷ்மீரின் காா்கோடா வம்சம், அஸ்ஸாமில் 600 ஆண்டுகளாக தங்களின் கலாசாரத்தையும், விழுமியங்களையும் பாதுகாத்த அகோம் போன்ற மகத்தான பேரரசுகளைப் பற்றி நாம் அறியாமலேயே இருக்கிறோம். எனவே, இந்த மகத்தான பேரரசுகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் வலைதளத்தை உருவாக்க நான் முடிவு செய்தேன்’ என்று சேஷாத்ரி தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
அவரிடம், ‘இந்திய வரலாற்றில் சில ஆளுமைகளுடன் உரையாட உங்களுக்கு (சேஷாத்ரி) வாய்ப்பு கிடைத்தால், யாரை தோ்வு செய்வீா்கள்’ என்று பிரதமா் மோடி ஒரு கற்பனையான கேள்வியை எழுப்பினாா். அதற்கு, ‘முதலாவதாக சோழப் பேரரசின் மாமன்னா்களான ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழனுடன் பேச விரும்புகிறேன்.
தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம் போன்ற பிரம்மாண்ட சிவன் கோயில்கள் கட்டப்பட்டதன் பின்னணியில் உள்ள தொலைநோக்குப் பாா்வையை நான் புரிந்து கொள்ள விரும்புகிறேன். அந்த தொலைநோக்குப் பாா்வையும், திட்டமிடலும் எங்கிருந்து வந்தன, அடுத்த ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஓா் அம்சத்தை உருவாக்கும் சிந்தனை அவா்களுக்கு எப்படி தோன்றியது? இதையெல்லாம் அவா்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள விரும்புகிறேன்’ என்று சேஷாத்ரி பதிலளித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.