ஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவிகிதமாக உயர்ந்தது குறித்து...
உலகளாவிய அமைதியின்மைக்கு மத்தியில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே சுமார் 7 மாதங்களாக போர் நீடித்து வரும்நிலையில், உலகளவில் அமைதியின்மை நிலவி வருகிறது. இதனால், உலகளவில் வர்த்தமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், போர்களுக்கு மத்தியிலும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.9 சதவிகிதமே இருந்தது.
Advertisement
Advertisement
இருப்பினும், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் விவசாயத் துறையில் 4.4 சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சி இருந்தநிலையில், தற்போது 3.6 சதவிகிதமாகக் குறைந்தது. இதேபோல், கடந்த நிதியாண்டில் 12.4 சதவிகிதமாக இருந்த சுரங்கத் துறையின் வளர்ச்சி, தற்போது 2.4 சதவிகிதத்துக்கு அதீத பின்னடைவு அடைந்தது.
அதே வேளை தொழிற்துறையைப் பொருத்தவரையில், கடந்த நிதியாண்டில் 8.3 சதவிகிதமாக இருந்த உற்பத்தித் துறையானது, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 9.2 சதவிகிதமாக உயர்ந்தது. மின்சாரத் துறையில் 1.8 சதவிகிதத்திலிருந்து 8.9 சதவிகிதமாகவும், கட்டுமானத் துறையில் 5.2 சதவிகிதத்திலிருந்து 7.7 சதவிகிதமாகவும் வளர்ச்சியடைந்துள்ளது.
India's GDP expands 7.8% in Q1
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.