ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவிகளுக்கு விடுதி! கல்வித் துறைக்கான அறிவிப்புகள்!
ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் மாணவிகளுக்கு விடுதிகள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.
உயர்கல்வித் துறையில் பல நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப். 1) தெரிவித்தார்.
2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (பிப். 1) தாக்கல் செய்தார்.
இதில் கல்வித் துறைக்கான ஒதுக்கீடு குறித்து அவர் பேசியதாவது,
Advertisement
Advertisement
'' 15,000 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் வரைகலை (அனிமேஷன்) ஒளிக்காட்சிகள், விளையாட்டு மற்றும் சித்திரக்கலை (காமிக்ஸ்) படைப்பாற்றல் ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.
மாநிலத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் மாணவிகளுக்கு விடுதிகள் அமைக்கப்படும்.
மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான வரி 2 சதவீதமாக குறைப்பு.
கால்நடை மற்றும் துணை கால்நடை மருத்துவக் கல்லூரிகள், பரிசோதனை ஆய்வகங்கள், இனப்பெருக்க வசதிகள் ஏற்படுத்தப்படும்.
ஆயுர்வேதத்திற்காக புதிதாக 3 அகில இந்திய நிறுவனங்கள் உருவாக்கப்படும்.
ஆயுஷ் மருந்தகங்கள் மற்றும் பரிசோதனைக் கூடங்கள் உயர் தரங்களுக்கு மேம்படுத்தப்படும்.
ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் மேம்படுத்தப்படும்.
தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் 5 பல்கலைக்கழக நகரங்களை உருவாக்குவதில் மாநிலங்களுக்கு ஆதரவு.
சுயசார்பு இந்தியாவின் முக்கிய உந்துசக்தியாக சேவைத் துறையை மையமாகக் கொண்ட 'கல்வி முதல் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு' நிலைக்குழு அமைக்கப்படும்.
இந்தக் குழு, வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகளை மேம்படுத்துவதற்கான துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.
கடந்த 12 ஆண்டுகளாக பணவீக்க விகிதம் தொடர்ந்து நிலையான விகிதத்தில் இருந்து வருகிறது.
நீடித்த வளர்ச்சி, நிலைத்தன்மை, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை எட்டும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
Union Budget 2026 Girls' Hostel to be set up in every district
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.