ஹிமாசலில் மாணவர்கள் முன்னிலையில் சமையல் பணியாளர் கொலை
ஹிமாசலில் மாணவர்கள் முன்னிலையில் சமையல் பணியாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாசலில் மாணவர்கள் முன்னிலையில் சமையல் பணியாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், காங்க்ரா மாவட்டத்தில் உள்ள சினூர் கிராமத்தில் உள்ள அரசு அரசு தொடக்கப் பள்ளியில் சமையல் பணியாளராக பணிபுரிந்து வந்தவர் சலோச்னா தேவி(58). வியாழக்கிழமை பிற்பகல் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த ராகேஷ் குமார்(48), சலோச்னாவை மாணவர்கள் முன்னிலையில் அரிவாளால் வெட்டியுள்ளார்.
மாணவர்கள் அலறல் சத்தத்தைக் கேட்டு வகுப்பறைகளில் இருந்து வெளியே வந்த ஆசிரியர்கள், கூர்மையான ஆயுதத்துடன் ராகேஷ் குமார் இருப்பதைக் கண்டனர். அதே நேரத்தில் சலோச்னா சமையலறைப் பகுதியில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். ஆசிரியர்கள் பள்ளியைவிட்டு குமாரை வெளியேறச் சொன்னார்கள். ஆனால் அவர் அவர்களையும் மிரட்டியிருக்கிறார்.
Advertisement
Advertisement
விரைவில், அருகிலுள்ள பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குமார் மீது கற்களால் எறிந்தனர். இதனால் அவர் தப்பிஓடி விட்டார். பின்னர் சலோச்னாவை அருகிலுள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவர் பலியாகிவிட்டதாக அறிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் பெற்றோர்கள் பள்ளி வளாகத்திற்குள் வெளியாட்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கிடையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அதே கிராமத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.
The accused had entered the school premises and allegedly attacked the victim, identified as Salochna Devi, a resident of Chinaur, with a sickle.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.