அமைச்சர் பதவிக்கு ரூ. 3 கோடியா? காங்கிரஸ் எம்எல்ஏ-விடம் பேரம்?
கேரளத்தில் ரூ. 3 கோடிக்கு அமைச்சர் பதவி வாங்கித் தருவதாக காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு அழைப்பு விடுத்தது குறித்து...
கேரளத்தில் அமைச்சர் பதவி வாங்கித் தருவதாக காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு அழைப்பு விடுத்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஏலத்தூர் தொகுதி எம்எல்ஏ-வாக இருப்பவர் வித்யா பாலகிருஷ்ணன். காங்கிரஸை சேர்ந்த இவருக்கு சமீபத்தில் செல்போனில் அழைப்பு வந்ததாகவும், அதில் வித்யாவுக்கு அமைச்சர் பதவி சிபாரிசு செய்வதாக மறுமுனையில் இருந்த நபர் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சைபர் குற்றவியல் காவல் நிலையத்தில் வித்யா புகார் அளித்துள்ளார்.
Advertisement
Advertisement
புகாரில் அவர் தெரிவித்ததாவது, "தொலைபேசி அழைப்பில் ராஜ்குமார் என்பவர் தொடர்புகொண்டு, அவர் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி அலுவலகத்தில் பணிபுரிவதாகத் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் எம்.பி. ஒருவரிடமிருந்து என்னுடைய தொலைபேசி எண்ணைப் பெற்றதாகக் கூறினார்.
தொடர்ந்து, கேரளத்தில் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்கவிருப்பதாகக் கூறிய அவர், ரூ. 3 கோடி கொடுத்தால் அமைச்சர் பதவி வாங்கித் தருவதாகவும் கூறினார்.
இதுகுறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, எம்எல்ஏ வித்யாவிடம் பேரம் பேசப்பட்டதா? அல்லது மோசடி முயற்சியா? என்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Kozhikode cyber cell probes Cabinet berth for Rs. 3 crore offer call to MLA Vidya
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.