தில்லி காவல்துறை புதிய ஆணையராக அனுராக் குமார் பொறுப்பேற்பு!
தில்லி காவல் ஆணையராக மூத்த ஐபிஎஸ் அதிகாரியான அனுராக் குமார் பொறுப்பேற்றுள்ளது தொடர்பாக...
தில்லி காவல்துறை புதிய ஆணையராக மூத்த ஐபிஎஸ் அதிகாரியான அனுராக் குமார் பொறுப்பேற்றுள்ளார்.
1994 ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அனுராக் குமார், மத்திய அரசால் இந்தப் பதவியில் நியமிக்கப்படுள்ளார்.
முன்னதாக, தில்லியின் காவல் ஆணையராக இருந்த சதீஷ் கோல்ச்சா, அந்த பதவியிலிருந்து விலகுவதையடுத்து, புதிய காவல்துறை ஆணையராக அனுராக் குமார் இன்று பொறுப்பு வகித்துள்ளார்.
Advertisement
Advertisement
யார் இந்த அனுராக் குமார்?
எம்ஜிஎம்யுடி (அருணாச்சலப் பிரதேசம்-கோவா-மிசோரம், யூனியன் பிரதேசங்கள்) பிரிவு அதிகாரியான அனுராக் குமார், தேசியத் தலைநகரின் காவல் துறைக்குத் தலைமை தாங்கும் பொறுப்பிற்கு உயர்த்தப்படுவதற்கு முன்பு, உளவுத்துறையில் சிறப்பு இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.
1992-ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான சதீஷ் கோல்ச்சாவுக்குப் பதிலாக அனுராக் குமார் இப்பொறுப்பை ஏற்கிறார். சதீஷ் கோல்ச்சா ஆகஸ்ட் 22, 2025 முதல் தில்லி காவல் துறை ஆணையராகப் பணியாற்றி வந்தார். காவல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, கோல்ச்சா திகார் சிறையின் தலைமை இயக்குநராகப் பணியாற்றினார்.
அடுத்த உத்தரவு வரும் வரை தில்லி காவல் ஆணையராக அனுராக் குமார் நீடிப்பார் என்று உள்துறை அமைச்சகம் இதற்கான நியமன உத்தரவை வெளியிட்டது. அதோடு அவர் உடனடியாக இந்தப் பதவியில் பொறுப்பேற்றார் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், தனது அடுத்த பணி நியமனத்திற்காக தில்லியின் துணைநிலை ஆளுநரைச் சந்தித்து அறிக்கை அளிக்குமாறும், பொறுப்பிலிருந்து விலகும் தில்லி காவல்துறை ஆணையர் சதீஷ் கோல்ச்சாவுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
Senior IPS officer Anurag Kumar on Friday took charge as the Commissioner of Delhi Police, succeeding Satish Golcha as the national capital's top officer.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.