FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜந்தர் மந்தரிலிருந்து சோனம் வாங்சுக்கை நீக்கியது தவறு! - ராகுல் காந்தி

ஜந்தர் மந்தரிலிருந்து சோனம் வாங்சுக்கை நீக்கியது தவறு என ராகுல் காந்தி தெரிவித்தது பற்றி...

Updated On : 18 ஜூலை 2026, 5:04 pm IST
ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:

தில்லியின் ஜந்தர் மந்தரிலிருந்து சோனம் வாங்சுக்கை நீக்கியது தவறு என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை (ஜூலை 18) தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளை எதிர்த்து, கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் போராட்டத்தில் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மோடி அரசின் அடிப்படைக் கொள்கைகளாக பொய்யும் வன்முறையும் உள்ளன. ஜந்தர் மந்தரில் அமைதி வழியில் உண்ணாவிரப் போராட்டம் மேற்கொண்டு வந்த சோனம் வாங்சுக்கை அங்கு இருந்து நீக்கியது தவறு.

வினாத்தாள் கசிவு, கல்விக்கான செலவுகள் அதிகரிப்பு மற்றும் மாணவர்களின் தற்கொலைகள் ஆகியவை எதிர்கால இந்தியாவின் முக்கிய பிரச்னையாக உருவெடுக்கும். இதுமாதிரியான பிரச்னைகளில் கேள்வி எழுப்புபவர்களை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

இந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக்குக்கு சிகிச்சை அளிக்க அனுமதி தருமாரு அவரின் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Leader of the Opposition Rahul Gandhi stated on Saturday (July 18) that removing Sonam Wangchuk from Delhi's Jantar Mantar was wrong.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments