FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர்

ஃபிஃபா இறுதிப் போட்டி குறித்து கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் விடுத்த வேண்டுகோள்....

Updated On : 19 ஜூலை 2026, 1:51 pm IST
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - கோப்புப் படம்
பகிர்:

ஃபிஃபா இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

விதான் சௌதாவில் அவர் அளித்த பேட்டியில், ஃபிஃபா இறுதிப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை எளிதாக்கும் வகையில், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் அதிகாலை 3.30 மணி வரை திறந்திருக்க அரசு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. இளைஞர்களின் விருப்பத்திற்கு இணங்க இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் போலீஸார் கேமராக்களை பொருத்தியுள்ளனர். யார் வெற்றி பெற்றாலும் இளைஞர்கள் பொறுமையை இழக்கக் கூடாது. அவர்கள் கால்பந்து போட்டியை அமைதியான முறையில் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 2026-ம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Advertisement

Advertisement

நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா - ஸ்பெயின் மோதும் போட்டி இன்று இரவு 12.30 மணிக்கு அமெரிக்காவின் நியூஜெர்ஸி திடலில் நடைபெறவுள்ளது. உலகம் முழுவதுமுள்ள கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

summary

Karnataka Chief Minister D K Shivakumar on Sunday appealed to football lovers to remain patient and maintain peace while watching the FIFA World Cup final.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments