நாடாளுமன்றத்தில் எதிரொலித்த சிஜேபி போராட்டம்! எதிர்க்கட்சிகள் அமளி!
நாடாளுமன்றத்தில் சிஜேபிக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் அமளி...
சிஜேபி போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்களை காவல்துறையினர் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி ஆயிரக்கணக்கான இளைஞர்களும் மாணவர்களும் அமைதிப் பேரணி நடத்த முயற்சித்தனர்.
Advertisement
Advertisement
ஆனால், அவர்களின் பேரணிக்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டு, துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மேலும், மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகைக்குண்டுகளை எறிந்து தாக்குதல் நடத்தினர்.
நாடு முழுவதும் தில்லி காவல்துறை செயல்பாட்டுக்கு கண்டனம் எழுந்த நிலையில், இன்றைய நாடாளுமன்ற கூட்டம் கூடியவுடன் இரு அவைகளிலும் மாணவர்களை தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் இரு அவைகளில் தொடங்கியவுடன் சில நிமிடங்களில் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
CJP protest echoes in Parliament! Opposition parties create an uproar!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.