FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இணையமே இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!

இணைய வசதியின்றி, யுபிஐ பணப்பரிமாற்றம் செய்யும் முறை, பின் எண் கூட இல்லாமல் வருகிறது.

Updated On : 21 ஜூலை 2026, 4:25 pm IST
பணப்பரிமாற்றம் - கோப்புப்படம் - IANS
பகிர்:

செல்போனில் இணைய வசதியே இல்லையென்றால்கூட, யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதியை இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் உருவாக்கி வருகிறது.

ஏற்கனவே கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் உள்ள என்எஃப்சி எனப்படும் அண்மை புல தொடர்பு என்ற சிறப்பம்சம், இனி யுபிஐ-யிலும் விரிவுபடுத்தப்படும். அதன் மூலம் பிஓஎஸ் இயந்திரங்களில் இணையம் இன்றி செல்போன் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

இது முதற்கட்ட சோதனை முயற்சி என்பதால், இரண்டாயிரம் ரூபாய் வரை மட்டுமே பரிவர்த்தனை மேற்கொள்ள முதல்கட்டமாக தேசிய கொடுப்பனவு கழகம் அனுமதி வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

விமானங்கள், சுரங்கத்துக்குள் பயணிக்கும் ரயில்களில் செல்வோரும் இனி இந்த யுபிஐ லைட் மூலம் மிகக் குறைந்த தொகையை பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.

இதற்காக இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (என்பிசிஐ),யுபிஐ லைட் என்ற வசதியை ஏற்படுத்தி வருகிறது. இதில், எவ்வளவு பணம் என்பதை குறிப்பிட்டு ஒகே செய்தால் போதும், பணப்பரிமாற்றம் முடிந்துவிடும் புதிய முறையை உருவாக்கி வருகிறது.

பயனர்கள் பின் எண் இல்லாமலேயே வணிகர்களின் கணக்குக்கு விரைவான ஆஃப்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ரூ.2,000 வரை முன்கூட்டியே வாலெட்டில் அனுப்பிக் கொள்ள வேண்டும்.

இதிலிருந்து இணையதளம் இல்லாவிட்டாலும் ஒரு தொகையை பணப்பரிமாற்றம் செய்யலாம். மெட்ரோ ரயில்கள், விமானங்கள், தொலைத்தொடர்பு வசதி இல்லாத பகுதிகள் போன்ற இடங்களில் யுபிஐ பணப்பரிமாற்றம் செய்ய முடியாமல் தவிக்கும் நிலை தீர்க்கப்படும்.

ஒரு மாதத்துக்கு 1400 கோடிக்கும் அதிகமான முறைகள் பரிவர்த்தனைகள் நடைபெற்று, யுபிஐ-யின் ஆதிக்கம் வலுவடைந்து வருகின்றன. இதனால் யுபிஐ சேவைக்கு வங்கிகள், கூகுள் பே போன்ற செயலிகளும் தங்களது ஒட்டுமொத்த ஆதரவை வழங்குகின்றன.

எனவே, இந்த ஆண்டின் இறுதிக்குள், இந்த பிஓஎஸ் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

UPI money transfers without the internet! You don't even need a PIN!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments