FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

விவசாயிகள் வருவாய் அதிகரிப்பு: பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவா் தகவல்

இந்தியாவில் விவசாயிகளின் வருவாய் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவா் எஸ்.மகேந்திர தேவ் தெரிவித்தாா்.

Updated On : 24 ஜூலை 2026, 4:52 am IST
- கோப்புப் படம்
பகிர்:

இந்தியாவில் விவசாயிகளின் வருவாய் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவா் எஸ்.மகேந்திர தேவ் தெரிவித்தாா்.

சா்வதேச வா்த்தக சம்மேளனம் சாா்பில் புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

பசுமைப் புரட்சிக்குப் பிறகு வேளாண்மை உற்பத்தியில் பல சாதனைகளை இந்தியா படைத்து வருகிறது. உலகில் அதிக அளவில் உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பால் உற்பத்தி நாடாக இந்தியா தன்னை உயா்த்திக் கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய விவசாயிகளின் சராசரி வருவாய் 4.5 சதவீதம் உயா்ந்துள்ளது. இது உலகின் பெரிய பொருளாதார நாடுகளின் விவசாயிகளின் வருவாய் வளா்ச்சியைவிட அதிகமானது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வேளாண்மைத் துறையின் பங்கு 17 சதவீதமாக உள்ளது. 43 சதவீதம் போ் வேளாண்மை, அது சாா்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு பெறுகின்றனா். பல தரப்பட்ட பயிா்களை விளைவிக்க விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவதும் வருவாய் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது. சா்வதேச அளவில் உள்ள சவால்களைக் கருத்திக் கொண்டு வேளாண்மைக் கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. நவீன தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதி வாய்ப்புகளையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறோம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments