FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நீட் முறைகேடு: மத்திய அரசுடன் சிஜேபி மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை!

மத்திய அரசுடன் சிஜேபி பேச்சுவார்த்தை தொடர்பாக...

Updated On : 24 ஜூலை 2026, 2:58 pm IST
சிஜேபி தலைமையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் - கோப்புப்படம்
பகிர்:

நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான கோரிக்கைகளுக்கு சுமுகமான தீர்வு காணும் முயற்சியின் ஒரு பகுதியாகக் கரப்பான் பூச்சி ஜனதாக கட்சி பிரதிநிதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தில்லியில் உள்ள விட்டல்பாய் படேல் இல்லத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, பிரதமரின் அலுவலக விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் மத்திய அரசு தரப்பிலும், சிஜேபி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர்.

சிஜேபி கட்சிக்கும் - மத்திய அரசுக்கு இடையே நடைபெறும் மூன்றாவது அதிகாரப்பூர்வ கூட்டம் இதுவாகும்.

Advertisement

Advertisement

முன்னதாக, ஜூலை 20 அன்று அமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற அடுத்தடுத்த இரண்டு கூட்டங்களில் நட்டா, சௌரவ் தாஸ் ஆகியோருடன் சிஜேபியின் மற்றொரு செய்தித் தொடர்பாளரான அசுதோஷ் ரங்காவும் பங்கேற்றிருந்தனர்.

தனது முக்கிய கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு அளித்த உறுதிகளைத் தொடர்ந்து, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது 26 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை வியாழக்கிழமை நள்ளிரவில் முடித்துக்கொண்டார்.

அமைச்சரின் இல்லம் அல்லது அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அரசின் அழைப்பை சிஜேபி முன்பு நிராகரித்திருந்தது. பேச்சுவார்த்தைகள் ஒரு நடுநிலையான இடத்தில் மட்டுமே நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை ஜந்தர் மந்தரில் தங்கள் போராட்டம் தொடரும் என்று அக்கட்சி உறுதியாகக் கூறியுள்ளது.

பிரதானின் பதவி விலகல் கோரிக்கையைத் தவிர, போட்டித் தேர்வுகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்துப் பொறுப்புக்கூறல், கல்வி முறையில் சீர்திருத்தங்கள், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு, இப்போராட்டத்தில் பங்கேற்ற அமைதியான போராட்டக்காரர்கள் மீதான அனைத்து முதல் தகவல் அறிக்கைகள் (FIR) மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுதல் ஆகிய கோரிக்கைகளையும் அக்கட்சி முன்வைத்துள்ளது.

A crucial meeting between the representatives of the Cockroach Janta Party (CJP) and the government was underway at the Vithalbhai Patel House here on Friday as part of efforts to find an amicable solution to the outfit's demands related to exam irregularities.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments