FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடும் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான போராட்டங்கள் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதாக பாஜக மூத்த தலைவர் குற்றச்சாட்டு பற்றி..

Updated On : 27 ஜூலை 2026, 4:49 pm IST
பாஜக - பிரதிப் படம்
பகிர்:

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான போராட்டங்கள் மூலம் அரசியல் ஆதாயம் தேட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முயற்சிப்பதாக ஜம்மு பாஜக மூத்த தலைவர் சுனில் சர்மா குற்றம் சாட்டினார்.

மக்கள் ஜனநாயகக் கட்சியைக் கடுமையாகச் சாடிய அவர் தில்லி போராட்டத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட சலுகைகளைப் போலவே, சுமார் 2,500 கைதிகள் விடுவிக்க வேண்டும் என்று அக்கட்சி கோரியதாக வெளியான தகவலை அடுத்து பாஜகவின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக சுனில் சார்மா கூறுகையில்,

Advertisement

Advertisement

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில், சிஜேபி முன்வைத்த கோரிக்கைகளை மத்திய அரசுடன் சுமூகமான தீர்வை எட்டியுள்ளது. அதைத் தொடர்ந்து அவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இழப்பீடு, முதல் தகவல் அறிக்கைகளைத் திரும்பப் பெறுதல், ராஜிநாமா, வேறு எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அவர்களின் அனைத்துக் கோரிக்கைகள் குறித்தும் மத்திய அரசு அவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டியது.

ஆனால், ராகுல் காந்தி தேவையற்ற முறையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முயற்சிக்கிறார். ராகுல் எதை எதிர்பார்க்கிறார்? துரதிர்ஷ்டவசமாக, அனைத்து முனைகளிலும் தோல்விகளைச் சந்தித்துவரும் காங்கிரஸ் கட்சி, இப்போது இதில் தனக்கான அரசியல் ஆதாயத்தை தேட முயற்சிக்கிறார்.

அதோடு, தெற்கு காஷ்மீரில் கடந்த வாரம் பயங்கரவாதியால் காவலர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்ட சுமார் 2,500 பேரை விடுவிக்க வேண்டும் என பிடிபி தலைவர் மெஹபூபா முஃப்தி கோரியதாக வெளியான தகவலைத் துரதிர்ஷ்டவசமானது.

தங்கள் தொழில், எதிர்காலத்திற்காகப் போராடிய மாணவர்களை, பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளுடன் அக்கட்சி சமப்படுத்துகிறதா?

கற்களை வீசுதல், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களை விடுவிக்க பிடிபி வாதிடுவதாக பாஜக தலைவர் குற்றம் சாட்டினார். பிரிவினைவாதக் கொள்கையை மீண்டும் உயிர்ப்பிக்கவும், அதற்கு இடமளிக்கவும் முயன்றதற்காக பிடிபி கட்சி தடை செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Senior Jammu BJP leader Sunil Sharma on Monday accused Congress leader Rahul Gandhi of deriving political mileage from the protests over the alleged NEET paper leak, asserting that the Centre already addressed concerns through an agreement.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments