நேபாளத்தில் 4-வது நாளாக தொடரும் ஊரடங்கு! மக்கள் அவதி
இந்திய எல்லையையொட்டி அமைந்துள்ள கிழக்கு நேபாளத்தின் தொடரும் ஊரடங்கு பற்றி..
இந்திய எல்லையை ஒட்டிய நேபாளத்தின் சில பகுதிகளில் மத ரீதியான பதற்றத்தைத் தொடர்ந்து நான்காவது நாளாகவும் இன்றும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதியான சுன்சாரி மாவட்டத்தில், மத ரீதியான வன்முறையைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு வியாழக்கிழமை நான்காவது நாளாகவும் நீடித்துள்ளது.
மாவட்டத்தின் கப்தன்கஞ்ச் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவேறு மதச் சமூகத்தினர் நடத்திய நிகழ்ச்சிகளின்போது ஒலிபெருக்கி பயன்பாடு மற்றும் மதக் கொடிகளைக் கட்டுவது தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. வன்முறையைக் கட்டுப்படுத்த காவல்துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.
Advertisement
Advertisement
இந்தப் பதற்றமான சூழலையடுத்து விதிக்கப்பட்ட ஊரடங்கை செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்று நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாவட்டத்தில் பாதுகாப்பு நிலைமை படிப்படியாகச் சீரடைந்து வருவதாக சுன்சாரி மாவட்டத்தின் உதவித் தலைமை அதிகாரி போஷன் லாம்மிச்சனே தெரிவித்தார்.
சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர, திங்களன்று முதன்முதலில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மாவட்ட நிர்வாகம் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை உள்பட 10 பகுதிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
ஊரடங்கு உத்தரவின் கீழ், மக்கள் நடமாட்டம், ஒன்றுகூடுதல், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. பல்வேறு முக்கிய பகுதிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்தும், குறிப்பாக சுன்சாரி மாவட்டத்தின் நிலைமை குறித்தும் ஆய்வு செய்ய பிரதமர் பலேந்திர ஷா வியாழக்கிழமையன்று தேசியப் பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
An indefinite curfew continued in several parts of Nepal's India-bordering Sunsari district in the Koshi province for a fourth day on Thursday, following communal violence that left one person dead and several injured.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.