உலகிலேயே அதிக வெப்பத்தை எதிர்கொள்ளும் 14 இந்திய நகரங்கள்!
உலகின் அதிக வெப்ப பாதிப்புக்குள்ளாகும் 50 நகரங்களின் பட்டியலில் மதுரை முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது.
உலகின் அதிக வெப்ப பாதிப்புக்குள்ளாகும் 50 நகரங்களின் பட்டியலில் மதுரை முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளது.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் உலகின் அதிக வெப்ப பாதிப்புக்குள்ளாகும் 50 நகரங்களில் 14 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
ஈராக்கின் அல் பஸ்ரா நகர் உலகிலேயே அதிக வெப்ப அபாயம் உள்ள நாடாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதில் இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் கானா போன்ற நாடுகளில் வெப்ப அபாயம் கொண்ட நகரங்கள் அதிகமாக உள்ளன. அதிக வெப்ப அபாயத்தைக் கொண்ட 95%-க்கும் மேற்பட்ட நகரங்கள் தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் அமைந்துள்ளன.
பட்டியலில் இந்திய நகரங்களான நாக்பூர், மதுரை, போபால், கான்பூர், புனே, பாட்னா, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஜெய்ப்பூர், லக்னௌ மற்றும் சென்னை இடம்பெற்றுள்ளன. நாக்பூர், மதுரை நகரங்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் முக்கிய சுற்றுலா நகரமான ஜெய்ப்பூர் வெப்ப அபாயம் கொண்ட நகரமாகவுள்ளது. சர்வதேச அளவில் கெய்ரோ, பாங்காக், ஹனோய் போன்ற முக்கிய நகரங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
உலகளவில் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் அது தொடர்பான அபாயங்களால் மக்கள் எந்தெந்த நகரங்களில் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்பதை மதிப்பிட 205 உலக நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 'நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள்' என்ற ஆய்விதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டது.
ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதுமுள்ள பல முக்கிய நகரங்களில் கடும் வெப்ப பாதிப்பு மற்றும் அதனைச் சமாளிக்கும் திறன் குறைவாகக் காணப்படுகிறது. இவை இரண்டும் வெப்ப அபாயத்தை அதிகரித்து, சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
14 Indian Cities Facing the Highest Temperatures in the World!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.