மோசமான வானிலை! உத்தரகண்டில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!
உத்தரகண்டில் ராகுல் காந்தி சென்ற ஹெலிகாப்டர் அவரமாக தரையிறக்கப்பட்டது குறித்து...
உத்தரகண்ட் சென்ற ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் மோசமான வானிலையால் நடுவழியில் அவசரமாகத் தரையிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று (ஜூன் 4) உத்தரகண்டின் அல்மோரா மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தில்லியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டார்.
இதனிடையே, மோசமான வானிலை ஏற்பட்டதால் ராகுல் காந்தி சென்ற ஹெலிகாப்டர் பந்த்நகரில் அவரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், அல்மோராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியால் நேரில் பங்கேற்க முடியாததால் அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, அல்மோரா பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி செல்போன் மூலம் தொடர்புக்கொண்டு உரையாற்றியுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தின் தேவைகள் மற்றும் ஆளுங்கட்சியான பாஜகவின் செயல்பாடுகள் குறித்து அவர் பேசியதாகக் கூறப்படுகிறது.
ராகுல் காந்தி தனது 2 நாள் உத்தரகண்ட் பயணத்தில், முஸ்லிம் முதியவர் ஒருவரைக் கும்பலிடம் இருந்து காப்பாற்றியது மூலம் நாடுமுழுவதும் பிரபலமான பயிற்சியாளர் முஹம்மது தீபக் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.
இருப்பினும், பந்த் நகரின் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி விரைவில் அல்மோராவுக்கு வருகை தருவதாக உறுதியளித்துள்ளார்.
Rahul Gandhi's helicopter, en route to Uttarakhand, made an emergency landing midway due to adverse weather conditions.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.