கர்நாடக அமைச்சரவையில் மகளிர் இடம்பெறாதது ஏமாற்றம்: காங்கிரஸ் தலைவர்
கர்நாடக அமைச்சரவையில் மகளிர் இடம்பெறாதது ஏமாற்றத்தை அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் தெரிவித்தது குறித்து...
கர்நாடக அமைச்சரவையில் ஒரு பெண் கூட இடம்பெறாதது ஏமாற்றத்தை அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் மார்கெரட் அல்வா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தின் முதல்வராக இருந்த சித்த ராமையா காங்கிரஸ் மேலிட உத்தரவின் பேரில், அவர் பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, தற்போதைய முதல்வராக டி.கே. சிவகுமார் நேற்று (ஜூன் 6) பதவியேற்றார். மேலும், அவருடன் 13 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இந்த அமைச்சரவையில் ஒரு பெண் கூட இடம்பெறாத விவகாரம் பேசுபொருள் ஆகியுள்ளது. பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் அதனை விமர்சித்து வருகிறது.
Advertisement
Advertisement
இது குறித்து காங்கிரஸ் தலைவர் மார்கெரட் அல்வா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது:
கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்ற டி.கே. சிவகுமாருக்கு வாழ்த்துகள். அவருக்கும் அவருடைய அமைச்சரவைக்கும் வெற்றிபெற வாழ்த்துகள். பதவியேற்ற புதிய கர்நாடக அமைச்சரவையில் குறைந்தபட்சம் ஒரு காங்கிரஸ் பெண் உறுப்பினராவது இடம்பெற்றிருந்தால் நான் மிகவும் மகிழ்ந்திருப்பேன். ஒருவர் கூட இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகத்தில் அதிகபட்சமாக முதல்வர் உள்பட 34 பேர் அமைச்சர்களாக அங்கம் வகிக்கலாம் என்பதால் அடுத்த கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில் பெண்கள் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Congress leader Margaret Alva stated on Thursday that the absence of even a single woman in the Karnataka cabinet is disappointing.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.