கவனம் பெறும் பிரதமர் மோடி - வெனிசுவேலா இடைக்கால அதிபரின் சந்திப்பு!
பிரதமர் மோடியுடன் வெனிசுவேலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் சந்திப்பு...
பிரதமர் நரேந்திர மோடியை எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுவேலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
உலகின் அதிக எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுவேலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், கடந்த புதன்கிழமை (ஜூன் 3) அன்று அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தார்.
இந்த நிலையில், தில்லியில், பிரதமர் மோடியை வியாழக்கிழமை பிற்பகல் நேரில் சந்தித்து உரையாடிய அதிபர் டெல்சி எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இருநாடுகள் இடையேயான முக்கிய உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெனிசுவேலா உடன் இந்திய அரசு பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெனிசுவேலாவின் வெளியுறவு, பொருளாதாரம், நிதி, அறிவியல், தொழில்நுட்பம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களும் அதிபர் டெல்சியுடன் இந்தியா வந்துள்ளதால், இந்த நிகழ்வு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
முன்னதாக, வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்க படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டன.
இதையடுத்து, வெனிசுவேலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்குப் பல்வேறு இந்திய நிறுவனங்களும் ஆர்வத்துடன் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Delcy Rodríguez, the acting President of the oil-rich nation of Venezuela, held discussions in person with PM Modi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.