எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: அரசுக்கு சரத் பவார் எச்சரிக்கை!
எல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசுக்கு கண்டனம்...
எல்பிஜி சமையல் எரிவாயு உருளைகளின் விலை உயர்த்தப்பட்டதற்கு தக்க அரசியல் விலை கொடுக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு சரத் பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வீடுகளில் சமையல் பயன்பட்டுக்கான எல்பிஜி சிலிண்டரின் விலை ஜூன் 7 முதல் ரூ. 29 மேலும் உயர்த்தப்பட்டுள்ளதற்கு கண்டனம் வலுக்கிறது. கடந்த 3 மாதங்களில் இரண்டாவது முறையாக எல்பிஜி விலையேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், எல்பிஜி விலை உயர்வைக் கண்டித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார் அணி) தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவார் தெரிவித்திருப்பதாவது: “எல்பிஜி விலை உயர்வு வெறும் இரண்டே ரூபாயில் ஆரம்பித்து, நாள்பட மேலும் அதிகரித்து, இன்று விலை எந்த அளவுக்கு விலை உயர்ந்து சென்றுள்ளது என்பதைப் பார்க்கிறோம். இவையனைத்தும், நிதி நிலை மற்றும் சாமானிய மக்களின் தினசரி வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
தமது அரசு விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் வைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி சொல்லியிருந்தார். ஆனால், இப்போது மத்திய அரசின் விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையானது என்னவென்று புரிகிறது. விலை ஏற்றி அதிர்ச்சியை படிப்படியாக அளிப்பதே அவர்களது கட்டுப்பாட்டு நடவடிக்கையாகிவிட்டது. இதற்கு பொறுப்பானவர்கள் ஒரு அரசியல் விலையைக் கொடுக்க நேரிடும்” என்றார்.
LPG price hikes: Govt will pay 'political price', says Sharad Pawar; Cong's Wadettiwar slams BJP
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.