இந்தியா கூட்டணி ஆலோசனை: தில்லி புறப்பட்டார் மமதா!
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மமதா பானர்ஜி தில்லிக்கு இன்று (ஜூன் 7) புறப்பட்டுச் சென்றது குறித்து..
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மமதா பானர்ஜி தில்லிக்கு இன்று (ஜூன் 7) புறப்பட்டார்.
திரிணமூல் மூத்த தலைவர்கள் டோலா சென், கல்யாண் பானர்ஜி ஆகியோரும் மமதா உடன் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி செய்த நிலையில், மமதா பானர்ஜி தோல்விக்குப் பிறகு நடைபெறும் இந்தியா கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டமாகும்.
Advertisement
Advertisement
பாஜகவின் வளர்ந்துவரும் அரசியலால் ஏற்படும் நெருக்கடிகள் மட்டுமின்றி, இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்குள்ளேயே இருக்கும் கருத்து வேறுபாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதால், இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு மிக முக்கிய கூட்டமாக இது பார்க்கப்படுகிறது.
ஜூன் 8 ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்கப்போவதில்லை என ஏற்கெனவே அறிவித்துள்ளது.
திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த நிலையில், தேர்தலுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையிலும் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது.
மற்றொரு கட்சிக்குச் செல்வது குறித்து கலந்தாலோசிக்காமல் சென்றதால், துரோகமாக இதனை திமுக கருதுகிறது. இதனால் இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என அறிவித்துவித்துள்ளது.
Mamata Banerjee leaves for Delhi to take part in INDIA bloc meeting
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.