மேக்கேதாட்டு அணை திட்டம்: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கை
மேக்கேதாட்டு அணை திட்டத்தில் விரைந்து அனுமதி வழங்குமாறு பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தல்
மேக்கேதாட்டு அணை திட்டத்தில் விரைந்து அனுமதி வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது, மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகவும், அணை கட்டுவதில் எவ்விதத் தடையும் இல்லை எனக் கூறி திட்டத்துக்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் டி.கே. சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும்நிலையில், பிரதமர் மோடியை டி.கே. சிவகுமார் சந்தித்துப் பேசியுள்ளார்.
Karnataka Chief Minister DK Shivakumar Writes To PM Modi In New Mekedatu Push
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.