நேபாளத்தில் இந்தியர் கைது! என்ன காரணம்?
நேபாளத்தின் லும்பினி மாகாணத்தில் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக...
நேபாளத்தின் லும்பினி மாகாணத்தில் போதைப்பொருள் மறைத்துவைத்திருந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் (40). நேபாள்கஞ்ச் துணை-பெருநகரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புச் சோதனையின்போது உள்ளாடைக்குள் போதைப்பொருள் மறைத்துவைத்திருந்தற்காக கைது செய்யப்பட்டதாக நேபாளக் காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அவரிடமிருந்து 63.5 கிராம் பிரவுன் சுகர் எனப்படும் போதைப்பொருளைக் காவல்துறையினர் கைப்பற்றினர். அதோடு ரிஸ்வான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
Advertisement
Advertisement
இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் மேலதிக விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், அந்த இந்தியரைக் காவலில் எடுத்துள்ளனர்.
மற்றொரு சம்பவத்தில், இமயமலை நாடான நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் விபத்துக்குள்ளான ஜீப் ஒன்றிலிருந்து 104 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றினர்.
சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதற்கு முன்பே ஜீப் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
An Indian national was arrested in Nepal's Lumbini province on Monday for allegedly possessing narcotic drugs concealed inside his undergarments, police said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.