ஒவ்வொரு சீக்கியக் குடும்பமும் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஊக்கத்தொகை வேண்டும்!
ஒவ்வொரு சீக்கியக் குடும்பமும் 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமென பஞ்சாப் மாநில பாஜக மூத்த தலைவர் வலியுறுத்தல்...
பஞ்சாபில், ஒவ்வொரு சீக்கியக் குடும்பமும் 4 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென அம்மாநில பாஜக வலியுறுத்தியுள்ளது.
பஞ்சாபில் ஒவ்வொரு சீக்கியக் குடும்பமும் 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும், அதற்கு அம்மாநில அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தி பஞ்சாப் மாநில பாஜக பொதுச்செயலர் ஜக்மோகன் சிங் ராஜு மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுபற்றி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டதாவது:
Advertisement
Advertisement
“சீக்கிய சமூகம் அரசியலமைப்பின்படி சிறும்பான்மையின சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தரவுகளின்படி, சீக்கிய சமூகத்தினரின் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, சீக்கியர்களின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்துக்கொண்டே வருகிறது. கடந்த 1991 ஆம் ஆண்டு 62.96 சதவிகிதமாக இருந்த சீக்கியர்களின் எண்ணிக்கை 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 57.69 சதவிகிதமாகக் குறைந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆந்திரத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் நோக்கில் 3 ஆவது மற்றும் 4 ஆவது குழந்தைகளைப் பெறும் பெற்றோருக்கு அம்மாநில அரசு ஊக்கத் தொகை வழங்குவதுபோன்று, பஞ்சாப் அரசும் வழங்க வேண்டுமென ஜக்மோகன் சிங் ராஜு வலியுறுத்தியுள்ளார்.
இது தனிப்பட்ட கருத்து, கட்சிக்கும் (பாஜக) இதற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், தென்மாநிலங்களில், ஒரு நபர், ஒரு வாக்கு எனும் உணர்வு இருப்பதால் வரும் காலங்களில் அவர்களின் மக்கள் தொகை அதிகரிக்கும் எனவும், நாங்கள் சிறும்பான்மை சமூகம் என்பதால் எங்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்க இதுபோன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் ஜக்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
In Punjab, the state BJP has urged every Sikh family to have four children.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.