உ.பி.யில் பாலம் இடிந்து விபத்து: 6 பேர் பலி!
உ.பி.யில் பாலம் இடிந்து விழுந்த விபத்து பற்றி...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்றிரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக கட்டுமானத்தில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.
மேலும், மூவர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஹமீர்பூர் மாவட்டத்தில் மோரகந்தர் முதல் கந்தௌர் கிராமம் வரை பெத்வா ஆற்றின் குறுக்கே இந்தப் பாலம் கட்டப்பட்டு வருகின்றது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், புதன்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், நள்ளிரவு 2 மணியளவில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. பாலத்தின் அடியில் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினரும் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மூவரைத் தேடும் பணிகளில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Bridge Collapses in UP! 6 Dead!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.