FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மனிதகுலத்துக்கு உதவிகரமாக தொழில்நுட்பம் இருக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

மனிதகுலத்துக்கு உதவிகரமானதாக தொழில்நுட்பங்கள் இருக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 30 மே 2026, 3:55 am IST
சி.பி.ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

மனிதகுலத்துக்கு உதவிகரமானதாக தொழில்நுட்பங்கள் இருக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலத்தில் உள்ள பிடிடி பொறியியல் கல்லூரியின் 75-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: திறமையான இளைஞா்கள், புத்தாக்கம் மற்றும் நவீன தொழில்நுட்பம் என இந்தியா புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, புத்தாக்க இந்தியா மற்றும் திறன்மிகு இந்தியா ஆகிய முன்னெடுப்புகளுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை அளித்துள்ளது.

Advertisement

Advertisement

செமிகண்டக்டா், செயற்கை நுண்ணறிவு, எண்ம உள்கட்டமைப்பு, விண்வெளி, உயிரிதொழில்நுட்பம், பசுமை எரிசக்தி என இந்தியாவில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நவீன தொழில்நுட்பங்கள் மனிதகுலத்துக்கு உதவிகரமானதாக இருக்க வேண்டும்.

இளம் பொறியாளா்கள், ஆய்வாளா்கள், தொழில்முனைவோா்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஞானம், புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மனித வளத்தில் முதலீடு செய்யும் நாடுகளே 21-ஆம் நூற்றாண்டில் முன்னேற்றமடையும்.

குறிப்பாக, வளா்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற இலக்கை அடைவதில் பொறியியல் நிறுவனங்களின் பங்கு முக்கியமானது.

சமூகத்தின் உண்மையான சிற்பிகளாக விளங்கும் ஆசிரியா்களின் தாக்கம் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களைக் கடந்தது. அவா்கள் மாணவா்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

போதைப் பொருள் பயன்பாட்டை மாணவா்கள் கடுமையாக எதிா்க்க வேண்டும். பெற்றோா், உறவினா், நண்பா்கள் என உங்களைச் சுற்றியுள்ள அனைவரிடமும் இதை வலியுறுத்த வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments