பட்டாசு வெடிப்பதால் நோய்கள் குணமாகுமா? மன்னிப்பு கோரிய பாஜக எம்எல்ஏ!
பட்டாசு வெடிப்பதால் நோய்கள் குணமாகும் என்று பேசிய பாஜக எம்எல்ஏ, அதற்கு விளக்கம் அளித்தது குறித்து...
பட்டாசு வெடிப்பதால் நோய்கள் குணமாகும் என்று பேசிய பாஜக எம்எல்ஏ, தற்போது அதற்கு விளக்கமளித்துள்ளார்.
மேலும், தான் பேசியது சர்ச்சையானதைத் தொடர்ந்து, மன்னிப்பு கோருவதாகவும் தன்னுடைய கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தீபாவளி கொண்டாட்டத்தின் போது, மேற்கு வங்கம், கொல்கத்தாவின் டோலிகஞ்ச் பகுதியில் நடைபெற்ற காளி பூஜை பந்தல் திறப்பு விழாவில் பாஜக எம்.எல்.ஏ. பாபியா அதிகாரி பங்கேற்று பேசினார்.
Advertisement
Advertisement
அப்போது அவர், “பட்டாசு வெடிப்பதால் பல நோய்கள் குணமாகும்” என்று பேசியது சமூக ஊடகங்களில் சர்ச்சையானது.
இதுகுறித்து பாபியா அதிகாரி அளித்த விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
இது நம்மிடையே உள்ள தீமைகளை ஒழிப்பதற்காகக் கொண்டாடப்படும் ஒரு ஒளித் திருவிழா, விளக்கு ஏற்றும் திருவிழா. முந்தைய காலங்களில், சடங்குகள் மூலம் இதுபோன்ற பல தீமைகள் ஒழிக்கப்பட்டன.
ஆனால் தற்போது, நாம் பட்டாசுகளின் காலத்தில் வாழ்கிறோம். மேலும் அறிவியல் எவ்வளவு முன்னேறியுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டால், ஒருவேளை நான் பேசிய கருத்துகள் இனி பொருத்தமானதாக இருக்காது.
ஆகையால், யாரேனும் புண்பட்டிருந்தால், நான் மன்னிப்பு கோருகிறேன். எனது கருத்தை திரும்பப் பெற நான் தயாராக இருக்கிறேன். அது திரும்பப் பெறப்பட்டதாகக் கருதுங்கள் என்று பாபியா அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.