150 கோடியை நெருங்குகிறதா இந்திய மக்கள் தொகை? எய்ம்ஸ் விளம்பரப் பலகையால் பரபரப்பு
இந்திய மக்கள் தொகை 150 கோடியை நெருங்குவதாகக் காட்டிய எய்ம்ஸ் விளம்பரப் பலகையால் பரபரப்பு
தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் நாட்டின் நிகழ்நேர மக்கள் தொகைக் கணக்கெடுப்பு டிஜிட்டல் விளம்பரப் பலகையின் புகைப்படம் என்று கூறப்படும் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படம் உண்மையானதா? என்பதும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால், அதில் வெளியான தகவல் மட்டும் வைரலாகிவிட்டது.
Advertisement
Advertisement
இந்திய மக்கள் தொகை 148 கோடியை கடந்துள்ளதாக அந்த டிஜிட்டல் விளம்பரப் பலகையில் எண்கள் காட்டுகின்றன. இதனைப் பார்த்த பலரும், என்ன நாட்டின் மொத்த மக்கள் தொகை 148 கோடியை எட்டிவிட்டதா என்று ஆச்சரியமடைந்தனர்.
இந்த கணக்கீடு எவ்வாறு நடத்தப்படுகிறது, எதன் அடிப்படையில் இந்த விளம்பரப் பலகையில் எண்கள் காட்டப்படுகின்றன என்பது குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. இந்த எண் உண்மையான மக்கள் தொகையைத்தான் காட்டுகிறதா? என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
நவம்பர் 10ஆம் தேதி இரவு எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் இந்திய மக்கள் தொகை 148 கோடியே 16 லட்சத்து 37 ஆயிரத்து 145 என்று இருக்கிறது.
இந்த விளம்பரப் பலகையில் வரும் எண்ணிக்கை, ஒவ்வொரு நிமிடமும், நாட்டில் பிறப்பு மற்றும் இறப்புகளின் சராசரி எண்களைக் கணித்து வெளியிடும் ஒரு தரவு மட்டுமே, மிகத் துல்லியமான கணக்கீடு இல்லை என்றும் சிலர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.