முகப்பு

ராணுவப் பயிற்சியின் போது பீரங்கி ஏறி இரு வீரர்கள் பலி!

ஹரியாணாவில் ராணுவப் பயிற்சியின் போது பீரங்கி ஏறியதால் இரு ராணுவ வீரர்கள் பலியாகினர்.

ராணுவப் பயிற்சியின் போது பீரங்கி ஏறி இரு வீரர்கள் பலி!
ராணுவ பீரங்கி - கோப்புப் படம்
பகிர்:

ஹரியாணாவில் ராணுவப் பயிற்சியின் போது பீரங்கி ஏறியதால் இரு ராணுவ வீரர்கள் பலியாகினர்.

ஹரியாணாவில் உள்ள போஜராஜ் கிராமத்தில் ராணுவப் பயிற்சி நடைபெற்று வந்துள்ளது. பயிற்சியின் போது பீரங்கி பயன்படுத்தப்பட்ட நிலையில், அங்கு கிளம்பிய புழுதியால் பீரங்கி ஒட்டுநரின் பார்வை மறைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நேற்று (நவ. 21) பயிற்சியின் போது முன்னால் நிறுத்தப்பட்டிருந்த உ.பி.யைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் நாயக் மனிஷ் குமார் மற்றும் நாயக் அனுஷ் குமார் ஆகியோரின் மீது பீரங்கி ஏறிச் சென்றது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் இரு வீரர்களும் படுகாயமடைந்தனர். உடனடியாக இருவரும் ஹிசார் ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, அவர்கள் ஏற்கனவே பலியானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மூத்த ராணுவ அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது.

summary

Two soldiers killed after being run over by a tank during military training!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.