முகப்பு

சிபிஎம் நிர்வாகி கொலை வழக்கு: 10 ஆண்டுகளுக்குப் பின் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

கேரளத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் சிபிஎம் நிர்வாகி கொடுரமாகக் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக...

சிபிஎம் நிர்வாகி கொலை வழக்கு: 10 ஆண்டுகளுக்குப் பின் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!
கோப்புப் படம்
பகிர்:

கேரளத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் சிபிஎம் நிர்வாகி கொடுரமாகக் கொல்லப்பட்ட வழக்கில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் எழிமலை பகுதியின் சிபிஎம் கிளைச் செயலாளராக இருந்தவர் சி.வி.தனராஜ் (40). டிஒய்எஃப்ஐ அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வந்த தனராஜ், கடந்த 2016 ஜூலை 11 அன்று அவரது தாயார் மற்றும் மனைவியின் முன்னிலையில் ஒரு கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் 19 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையின் போது சி. பிஜூ என்பவர் கொல்லப்பட்டார்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, சாட்சிகளின் வாக்குமூலங்கள் மூலம் பாஜக தொண்டர்களான டி.பி.பிஜு, எம்.வைஷாக் மற்றும் எம்.விபின் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

போதிய ஆதாரங்கள் இல்லாததால் மீதமுள்ள 16 பேரும் விடுவிக்கப்படுவதாகவும் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

10 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தண்டனை விவரங்கள் நவ. 25 அன்று அறிவிக்கப்படும் என நீதிபதி கே.என்.பிரசாந்த் தெரிவித்தார்.

இந்த வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் சி.கே.ஸ்ரீதரன் பேசுகையில், “குற்றம் சாட்டப்பட்ட நபர்களை விடுவித்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளோம். தனராஜின் வீட்டின் முன்பு கொலை நடக்கையில் முதல் சாட்சியால் 11 குற்றவாளிகள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களும் இந்த சதித் திட்டத்தில் அடங்குவர்” என்று அவர் தெரிவித்தார்.

summary

Murder case of CPM official: 3 BJP members convicted 10 years later!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.