இந்தியாவிடம் எவ்வளவு தங்கம் உள்ளது தெரியுமா?
இந்தியாவின் கையிருப்புத் தங்கம் குறித்து...

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் வெளிநாடுகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 60.1 டன் தங்கத்தை இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது.
இந்தியாவிடம் மொத்தம் 880.5 டன் கையிருப்பு தங்கத்தை ரிசர்வ் வங்கி வைத்துள்ள நிலையில், 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் மட்டும் வெளிநாடுகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 60.1 டன் தங்கத்தை இந்தியாவுக்கு ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் உள்நாட்டு கையிருப்புத் தங்கத்தின் அளவு 740.1 டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் வரையில் உள்நாட்டுக் கையிருப்பு 680.5 டன்னாக (77%) இருந்தது.
Advertisement
Advertisement
மொத்தம் 880.5 டன் தங்கம் வைத்திருக்கும் நிலையில், 740.1 டன் (84%) இந்தியாவிலும், மீதமுள்ள 140.4 டன் தங்கம் இங்கிலாந்து மற்றும் சர்வதேச நிதி அமைப்பாகச் செயல்படும் பிஐஎஸ்-லும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.