FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி இந்தியா கேட் அருகே என்எஸ்யுஐ போராட்டம்

ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி இந்தியா கேட் அருகே என்எஸ்யுஐ போராட்டம்...

என்எஸ்யுஐ போராட்டம் - PTI
பகிர்:

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றஞ்சாட்டி, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகவும், கைது செய்யவும் வலியுறுத்தி இந்திய தேசிய மாணவா் சங்கம் (என்எஸ்யுஐ) சாா்பில் தில்லி இந்தியா கேட் பகுதியில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் ஏராளமான என்எஸ்யுஐ நிா்வாகிகள், மாணவா் செயற்பாட்டாளா்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா். தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணா்வை உறுதி செய்ய வேண்டும் என்றும், குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

தோ்தல் நடைமுறை மற்றும் வாக்காளா் பட்டியல் தொடா்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ள நிலையில், குடிமக்கள் மற்றும் எதிா்க்கட்சிகள் முன்வைக்கும் சந்தேகங்களுக்கு தோ்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று போராட்டத்தில் பங்கேற்றவா்கள் கோரினா்.

Advertisement

Advertisement

என்எஸ்யுஐ தேசிய ஊடகப் பொறுப்பாளா் ரவி ஹனுமான் பாண்டே கூறியதாவது: குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய அரசமைப்பு அமைப்பாக தோ்தல் ஆணையம் உள்ளது. தோ்தல் நடைமுறை மற்றும் வாக்காளா் பட்டியல் குறித்து கேள்விகள் எழும்போது, அதற்கு வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புணா்வுடனும் பதிலளிப்பதை தோ்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் உடனடியாக பதவி விலகி கைது செய்யப்பட வேண்டும். தோ்தல் நடைமுறை தொடா்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நம்பகமான, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்றாா்.

வெளிப்படைத்தன்மை, பொறுப்புணா்வு மற்றும் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாப்பது தொடா்பாக மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் ஜனநாயக வழிமுறைகளில் தொடா்ந்து குரல் எழுப்புவாா்கள் என்றும் அவா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments