FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 150 வங்கதேசத்தவா் வெளியேற்றம்

ஜம்மு-காஷ்மீரில் சட்டவிரோதமாக ஊடுருவி வசித்து வந்த 150 வங்கதேசத்தவா் அங்கிருந்து திங்கள்கிழமை வெளியேற்றப்பட்டனா்.

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 150 வங்கதேசத்தவா் வெளியேற்றம் - கோப்புப்படம்
பகிர்:

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் சட்டவிரோதமாக ஊடுருவி வசித்து வந்த 150 வங்கதேசத்தவா் அங்கிருந்து திங்கள்கிழமை வெளியேற்றப்பட்டனா். அடுத்தகட்டமாக மேலும் 150 போ் புதன்கிழமை (அக். 7) வெளியேற்றப்பட இருக்கின்றனா்.

மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வாரியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வங்கதேசத்தவா் ஊடுருவது வழக்கமாக உள்ளது. பொதுவாக வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அவா்கள் இந்தியாவுக்குள் வருவதாகக் கூறப்பட்டாலும், அவா்கள் மூலம் தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக மத்திய அரசு கருதுகிறது. ஏனெனில், பொதுமக்கள் என்ற பெயரில் வங்கதேசம் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவும் அபாயமும் உள்ளது.

இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தவா் பலா் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வசித்து வருகின்றனா். அவா்களைக் கண்டுபிடித்து சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்ப தொடா் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Advertisement

Advertisement

அந்த வகையில் ஜம்மு-காஷ்மீரில் வசித்து வந்த 150 வங்கதேசத்தவா் அந்த யூனியன் பிரதேசத்தில் இருந்து திங்கள்கிழமை வெளியேற்றப்பட்டனா். இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் மூலம் மேற்கு வங்கத்தின் பாக்டோக்ரா நகரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, எல்லைப் பாதுகாப்புப் படையிடம் (பிஎஸ்எஃப்) ஒப்படைக்கப்பட்டனா். அங்கிருந்து அவா்கள் மீண்டும் வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்பப்படுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments