FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மோசடிக்கு உடந்தை! வங்கிக் கணக்கு விவரங்களை அளித்த 5 பேர் கைது!

சைபர் மோசடியாளர்களுக்கு தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை பயன்படுத்த அனுமதித்தவர்கள் கைது...

சைபர் மோசடி... - IANS
பகிர்:

சைபர் மோசடியாளர்களுக்கு தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை பயன்படுத்த அனுமதித்ததற்காக 5 பேரை புணே போலீசார் கைது செய்துள்ளனர்.

பொதுமக்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி பல்வேறு வகைகளில் ஆன்லைன் வழியாக மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அதனால்தான் வங்கிக் கணக்கு விவரங்கள், ஏடிஎம் பின் நம்பர், ஓடிபி ஆகியவற்றை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று வங்கிகள் மூலமாகவும் சைபர் குற்றப்பிரிவு மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், புணேவைச் சேர்ந்த சிலர் பணத்திற்காக தங்கள் வங்கிக் கணக்குகளை மோசடிக்கு பயன்படுத்த அனுமதித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி, நாடு முழுவதும் 19 பேரிடம் மொத்தம் 1.8 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தை டெபாசிட் செய்யத் தங்கள் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதித்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பணம் வழங்கப்பட்டுள்ளது. சைபர் மோசடிகளுக்கு பயன்படுத்தும் வங்கி கணக்குகள் 'மியூல் கணக்குகள்' என்று கூறப்படுகிறது.

ஷ்ரவன் ராஜேந்திர அங்குஷ் (25), ஹரியோம் ஹரிராம் சாஹு (24), இடஃபான் ஷேக் (23), சாஹில் ரவூஃப் ஷேக் (25), தாலிப் நூர்முகமது ஷேக் (25) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே இளைஞர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற மோசடிக்கு வங்கிக்கணக்கு விவரங்களைக் கொடுத்தால் அதுவும் குற்றம் என்பதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர்.

summary

Five held for providing mule accounts to cyber fraudsters

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments