FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

வானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது பற்றி..

8 October 2026, 4:12 am IST
ராகுல் காந்தி - கோப்புப் படம்
பகிர்:

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரணியின்போது, தில்லி நாடாளுமன்ற சாலையில் உள்ள அகில இந்திய வானொலி தலைமையகமான ஆகாஷவாணி கட்டடத்துக்குள் அனுமதியின்றி நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி வாத்ரா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது நகர காவல்துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின்படி, உரிய அனுமதியின்றி அரசு அலுவலக வளாகத்துக்குள் நுழைந்ததாகவும், அங்கு தர்னாவில் ஈடுபட்டபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஆகாஷவாணி காவலாளிகள் இருவர் காயமடைந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போராட்டத்தின்போது அரசு அலுவலக சுவர்கள் சேதப்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் புகைப்பட ஆதாரங்களை காவல்துறையினர் சேகரித்ததாக தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஆகாஷவாணி வளாகத்தில் சுமார் 9 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற தர்னா மற்றும் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் புதன்கிழமை கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "என் மீது ஏற்கெனவே 45 வழக்குகள் உள்ளன. அந்த எண்ணிக்கை 100 ஆக உயர வேண்டும் என்பதே எனது இலக்கு. என் மீது பாயும் ஒவ்வொரு வழக்கும், எனக்கு ஒரு பதக்கம் போன்றது" என்று பதிலளித்தார்.

காங்கிரஸ் கண்டனம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு (எஸ்ஐஆர்) எதிராக ராகுல் காந்தி போராடி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், பதற்றமடைந்துள்ள பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சரும் அவருக்கு எதிராக வழக்குகளைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி இண்டி கூட்டணி நடத்திய பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட 260 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை பல மணி நேரம் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments