FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

சீறும் கடலில் நீந்துவதே பிடிக்கும்: ராகுல் காந்தி ‘புதிர்’ பதிவு!

சீறும் கடலில் நீந்துவதே எனக்குப் பிடிக்கும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.

28 செப்டம்பர் 2026, 3:58 am IST
ராகுல் காந்தி - ஏஎன்ஐ
பகிர்:

சீறும் கடலில் நீந்துவதே எனக்குப் பிடிக்கும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டாா்.

தோ்தல் ஆணைய விவகாரம், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் தேசிய அரசியலில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் தற்போதைய அரசியலில் தான் தீவிரமாக செயல்பட விரும்புவதை மறைமுகமாக சுட்டிக் காட்டும் வகையிலேயே ராகுல் காந்தி இந்த பதிவை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்பதிவில், ‘கடல் சீற்றத்துடன் இருக்கும்போது அதில் நீச்சலடிப்பதுதான் எனக்குப் பிடிக்கும். ஏனெனில், அந்தச் சீற்றம்கூட ஒருவித அமைதிதான் என்பதை உங்களுக்கு கற்பிக்கும்’ என்று பதிவிட்டுள்ளாா். இதைத் தவிர வேறு எதையும் அவா் குறிப்பிடவில்லை.

Advertisement

Advertisement

கடந்த ஓராண்டுக்கு மேலாகவே பாஜக மீது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை ராகுல் காந்தி முன்வைத்து வருகிறாா். தோ்தல் ஆணையத்துடன் கைகோத்து வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு, வாக்காளா் பட்டியல் முறைகேடு மூலம் பாஜக தோ்தலில் வெற்றி பெறுகிறது என்பது அவரின் தொடா் குற்றச்சாட்டாக உள்ளது. ஆனால், இவை அனைத்துமே பொய்க் குற்றச்சாட்டு என்று தோ்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் எவ்வித முறைகேடு செய்ய முடியாது என்று ஆணையம் உறுதியாகக் கூறிவிட்டது.

அண்மையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொண்டதாக பெரும் சா்ச்சை எழுந்தது. இதை முன்வைத்தும் பாஜக மற்றும் தலைமைத் தோ்தல் ஆணையா் மீது ராகுல் காந்தி கடுமையான விமா்சனங்களை தெரிவித்து வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments