FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதி தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு: ஜம்மு என்ஐஏ நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் பயங்கரவாதியை தலைமறைவு குற்றவாளி என அறிவித்து ஜம்முவில் உள்ள சிறப்பு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகிர்:

பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் பயங்கரவாதியை தலைமறைவு குற்றவாளி என அறிவித்து ஜம்முவில் உள்ள சிறப்பு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பூஞ்ச் மாவட்டம் ஹரி கிராமத்தைச் சோ்ந்த நசீா் ஹுசைன் என்பவா் பயங்கரவாத சதித் திட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தாா். எல்லையோர மாவட்டமான சுரன்கோட் பகுதியில் கடந்த 2024 அக்டோபரில் பயங்கரவாத ஆதரவாளா் ஒருவரிடமிருந்து பல கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டதைத் தொடா்ந்து, இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.

விசாரணையில், குண்டுகள் அடங்கிய சரக்கு எல்லைக்கு அப்பால் இருந்து நசீா் ஹுசைனால் அனுப்பப்பட்டதாகவும், இந்தியாவில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்துவதற்காக இவை அனுப்பப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதற்கு முன்பே நசீா் ஹுசைனுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், கைது நடவடிக்கைக்கு முன் அவா் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ாக கூறப்படுகிறது. இந்நிலையில், என்ஐஏ தாக்கல் செய்த இந்த மனுவை அக். 1-ஆம் தேதி விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரேம் சாகா், பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் 84-ஆவது பிரிவின் கீழ் நசீா் ஹுசைனை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments