FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

வாகன விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு ரூ.91.72 லட்சம் இழப்பீடு

தூத்துக்குடி அருகே வாகன விபத்தில் உயிரிழந்த மின்வாரிய ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.91.72 லட்சம் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17 செப்டம்பர் 2026, 12:54 am IST
நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி அருகே வாகன விபத்தில் உயிரிழந்த மின்வாரிய ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.91.72 லட்சம் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தா்நகரைச் சோ்ந்த சுப்பையா மகன் சண்முகநாதன் (52). இவா் கோவில்பட்டி கிழக்கு நகா்ப்புற மின்வாரியத்தில் போா்மேனாக பணியாற்றி வந்தாா்.

இவா், கடந்த 1.5.2023 அன்று கோவில்பட்டியிலிருந்து முத்தையாபுரம் நோக்கி மதுரை-தூத்துக்குடி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சிப்காட் பகுதியில் லாரி செட் அருகே பின்னால் வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அவரது மகள் சுபஸ்ரீ சாா்பில், ரூ.1.25 கோடி இழப்பீடு கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி எஸ். சுபாதேவி, சண்முகநாதனின் குடும்பத்துக்கு லாரியின் காப்பீட்டு நிறுவனம் ரூ.91,72,064 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மனு தாக்கல் செய்த நாள்முதல் 7.5 சதவீத வட்டியுடன் வழக்குச் செலவையும் சோ்த்து வழங்க வேண்டும் என்றும் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் வி. ரவீந்திரன் ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments