டிசம்பரில் உச்சம் தொடும் எல்-நினோ தாக்கம்! பிப்ரவரி வரை நீடிக்குமா?
எல்-நினோ நிகழ்வின் தாக்கம் குறித்து...
பசிபிக் பெருங்கடலில் தீவிரமடைந்து வரும் எல்-நினோ அடுத்தாண்டு பிப்ரவரி வரையில் நீடிக்க வாய்ப்பிருப்பதாக சர்வதேச வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்துக்கு மாறாக உயர்வதும், அதனுடன் தொடர்புடைய வளிமண்டலக் காற்று சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள்தான், எல்-நினோ. இது இந்தியா உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் வானிலை அமைப்புகளைப் பாதிக்கக்கூடிய ஒரு முக்கியமான வானிலை நிகழ்வு. இதன் தாக்கம் ஒவ்வொரு பகுதிக்கும், பருவகாலத்துக்கேற்ப மாறுபடுகிறது.
2026-ஆம் ஆண்டில் தற்போதைய எல் நினோ நிகழ்வு கணிசமாக வலுவடைந்துள்ளது. 2026 மே முதல் ஜூலை மாதங்களில் சுமார் +1.5 டிகிரி செல்சியஸாக இருந்த நிலையில், ஜூலை மாதத்தில் 2.0 டிகிரி செல்சியஸை எட்டியது; அதனை தொடர்ந்து ஜூலை மாத இறுதியிலும், ஆகஸ்ட் மாத மத்தியிலும் வாராந்திர மதிப்புகள் சுமார் +2.2 டிகிரி செல்சியஸ் முதல் +2.6 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தன. இந்த நிகழ்வு மேலும் வலுவடைந்து, நிகழாண்டின் இறுதியில் மிக அதிக தீவிரத்தை அடையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வழக்கத்தைக் காட்டிலும் 3.7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் என்றும், டிசம்பரில் எல்-நினோவின் தாக்கம் உச்சமடைந்து, அடுத்தாண்டு பிப்ரவரி வரையில் நீடிக்க வாய்ப்பிருப்பதாக சர்வதேச வானிலை மையம் எச்சரித்துள்ளது.
The international meteorological agency has warned that the impact of El Niño is likely to persist until February of next year
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.