FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

‘இளைஞர்களைச் சிறையில் அடைப்பது கோழைத்தனம்’ - ராகுல் காந்தி

ஜந்தர் மந்தரில் போராடிய இளைஞர்களை சிறையில் அடைப்பது கோழைத்தனமான செயல் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதைப் பற்றி...

14 அக்டோபர் 2026, 11:07 am IST
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
பகிர்:

ஜந்தர் மந்தரில் போராடிய இளைஞர்களை சிறையில் அடைப்பது கோழைத்தனமான செயல் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் அவர் பதவி விலகக் கோரியும் தில்லியில் நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

தில்லியில் வழக்கமாக போராட்டங்கள் நடைபெறும் ஜந்தர் மந்தரில் போராட மத்திய அரசு தடை விதித்து, ஜந்தர் மந்தர் இனி போராடுவதற்கான இடமில்லை என்று அறிவித்த நிலையில், ஜந்தர் மந்தருக்குள் நேற்று அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சௌரவ் தாஸ், அஷுடோஷ் ரங்கா, அஜிங்கியா ஆகியோரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

Advertisement

Advertisement

அவர்கள் மூவரையும் இன்று காலையில் தில்லி போலீசார், தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சௌரவ் தாஸ் மற்றும் அஷூதோஷ் ரங்கா இவரும் ஐந்து நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், அஜிங்கியா ஷிண்டே பிணைப்பத்திரத்தில் கையெழுத்திட்ட பிறகு விடுவிக்கப்பட்டர்.

இந்த நிலையில், ஜந்தர் மந்தரின் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜந்தர் மந்தரில் மூவர்ணக் கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவது குற்றமல்ல. அதற்காக இளைஞர்களைச் சிறையில் அடைப்பது கோழைத்தனமான செயல்.

மாணவர்கள், இளைஞர்கள், பத்திரிகையாளர்கள், இந்தியா கூட்டணியினர் என இவர்கள் வெவ்வேறாக இருந்தாலும் இவர்களின் போராட்டம் ஒரு நோக்கத்துக்காகத்தான். மக்கள் அனைவரும் அரசியலமைப்பின் உரிமைகளுக்காகவே போராடுகின்றனர். ஜந்தர் மந்தர் இந்திய மக்களுக்குச் சொந்தமானது. நாங்கள் அதை மீட்டெடுப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.

summary

Leader of the Opposition in the Lok Sabha Rahul Gandhi has stated that imprisoning the youths who protested at Jantar Mantar is an act of cowardice.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments